உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வாக்காளர் சிறப்பு முகாமில் 16,176 மனுக்கள் ஏற்பு

 வாக்காளர் சிறப்பு முகாமில் 16,176 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதியில் நடந்த வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில், 16,176 வாக்காளர்கள் நேற்று முன்தினம் விண்ணப்பித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில், 3,070 ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், இடமாற்றம் செய்ய மனு அளிக்க, சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த முகாமில், ஏழு சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி 13,731, நீக்கம் 31, முகவரி மாற்றம் மற்றும் இடமாற்றம் 2,414 என, மொத்தம் 16,176 மனுக்கள் வரப்பெற்றன. 'இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ