உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலரிலிருந்து கீழே விழுந்த சிறுவன் பலி

டூ - வீலரிலிருந்து கீழே விழுந்த சிறுவன் பலி

மதுராந்தகம் : செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அடுத்த வையாவூர் ஊராட்சியை சேர்ந்த குமரன் மகன் கார்த்திகேயன், 16. அப்பகுதி பள்ளியில், பிளஸ் ௧ படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குன்னங்குளத்துார் பகுதிக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக, சாலையோர பள்ளத்தில் சறுக்கி கீழே விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து சென்ற படாளம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.உடற்கூறு ஆய்வு முடிந்த பின், சிறுவனின் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை