உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குட்கா பொருட்கள் விற்பனை மாமல்லையில் 2 கடைக்கு சீல்

குட்கா பொருட்கள் விற்பனை மாமல்லையில் 2 கடைக்கு சீல்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், அக்., 13ம் தேதி, மல்லிகேஸ்வரர் கோவில் அருகில் உள்ள டீக்கடையில், மாமல்லபுரம் போலீசார் சோதனை நடத்தினர். கடை உரிமையாளர் மணிகண்டன், 51, என்பவர், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பது தெரிந்தது.அதே நாளில், அப்பகுதியில் உள்ள வேலன் ஸ்டோர்ஸ் என்ற கடையில் சோதனை நடத்திய போது, அங்கு சரவணன், 31, என்பவர் குட்கா பொருட்கள் விற்பதை கண்டறிந்தனர்.இரண்டு பேர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், அவர்களை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர். இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரசாத், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், சுகாதார ஆய்வாளர் ரகுபதி, போலீசார், பூட்டப்பட்ட இரண்டு கடைகளிலும் நோட்டீஸ் ஒட்டி 'சீல்' வைத்தனர்.உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியதாவது:அரசு தடை செய்துள்ள குட்கா பொருட்கள் விற்பவர் கைது செய்யப்படுவார். முதல்முறையாக பிடிபட்டால், 15 நாட்கள் கடையை மூடி, 25,000 ரூபாய் அபராதம் விதிப்போம்.இரண்டாம் முறை பிடிபட்டால், ஒரு மாதம் கடையை மூடி, 50,000 ரூபாய் அபராதம் விதிப்போம். மூன்றாம் முறையாக பிடிபட்டால், மூன்று மாதங்கள் கடையை மூடி, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை