உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  நில அபகரிப்பு பிரிவில் 3 வழக்குகளுக்கு தீர்வு

 நில அபகரிப்பு பிரிவில் 3 வழக்குகளுக்கு தீர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், நில அபகரிப்பு பிரிவில், மூன்று வழக்குகளுக்கு, நேற்று தீர்வு காணப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், நில அபகரிப்பு பிரிவு உள்ளது. இங்கு, நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்கள் தினமும் அளிக்கப்படுகின்றன. இந்த மனுக்கள் மீதான விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக, புகார் எழுந்தது. இதையடுத்து வருவாய்த்துறை, காவல் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில், நில அபகரிப்பு சிறப்பு பிரிவு குறைதீர்வு கூட்டம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் தலைமையில், நேற்று நடந்தது. இந்த குறைவு தீர்வு கூட்டத்தில், நிலம் தொடர்பான மூன்று வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணைக்குப் பின், மூன்று வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. இந்த குறைதீர்வு கூட்டம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று, மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி