300 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது; இருவர் எஸ்கேப்
மறைமலைநகர்:கர்நாடகா மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு, காரில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து , செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் வாலாஜாபாத் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக வந்த 'ஹூண்டாய் கிரிஷ்டா' காரை நிறுத்த முயன்ற போது, கார் நிற்காமல் சென்றது. காரை காரை பின்தொடர்ந்து சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம், பாலுார் காவல் நிலையம் அருகில் சென்ற போது, காரில் இருந்த மூன்று நபர்கள் இறங்கி தப்பி ஓடினர்.இருவர் தப்பிச்சென்ற நிலையில், அதில் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்து, பாலுார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப், 24, என்பதும், காரில் 300 கிலோ எடையுள்ள, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.இதையடுத்து பிரதீப்பை கைது செய்த போலீசார், குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். தப்பிச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.