உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  32 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.6,700 அபராதம் விதிப்பு

 32 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.6,700 அபராதம் விதிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நேற்று பேரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். திருப்போரூர் பேரூராட்சியில், பேருந்து நிலையம், ஓ.எம்.ஆர்., சாலையில், உள்ளிட்ட பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது மற்றும் பயன்படுத்துவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது. செயல் அலுவலர் சங்கீதா லதா உத்தரவின்படி, துாய்மை அலுவலர் ரகுபதி, மேற்பார்வையாளர் தினேஷ், பேரூராட்சி ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், மேற்கண்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் விற்பது தெரிந்தது. இதில், 32 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு, 6,700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை