உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 73 வெளிநாட்டவருக்கு சிகிச்சை

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 73 வெளிநாட்டவருக்கு சிகிச்சை

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, 42 துறைகளுடன் 3,150 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தின் தலைமை மருத்துவமனையாகவே செயல்பட்டு வருகிறது.இங்கு, தினமும் 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல தினமும் 15,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.பல்துறை மருத்துவ நிபுணர் குழு, உயர் கட்டமைப்பு இருப்பதால், தமிழகம் மற்றும் அண்டை மாநிலத்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அந்த வகையில், 2023ல், மலேஷியா, வங்க தேசம், எத்தியோப்பியா, இலங்கை, நைஜீரியா, சுவிட்சர்லாந்து, சூடான், நேபாளம், ஜெர்மனி, அங்கோலா, மேற்கு ஆப்ரிக்கா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.இது குறித்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:கடந்தாண்டில் அதிகபட்சமாக வங்கதேசத்தைச் சேர்ந்த 40 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ஒன்பது பேர், மஞ்சள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இவர் உட்பட, 73 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 2,720 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இவை, மருத்துவமனையின் சிகிச்சை தரத்துக்கு கிடைத்த சான்றாக இருப்பதை நாங்கள் கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை