உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பராமரிப்பு இல்லாத குளம் சீரமைக்க எதிர்பார்ப்பு

பராமரிப்பு இல்லாத குளம் சீரமைக்க எதிர்பார்ப்பு

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சியில், சின்னம்மன் கோவில் குளம் உள்ளது.இந்த குளத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளதாததால், குளம் முழுதும் ஆகாயத்தாமரை, கோரைப்புற்கள் நிறைந்தும், கரையோரங்களில் முள்செடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது.மேலும், குளத்தை சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்நிலையில், பராமரிப்பில்லாத குளத்திலிருந்து வெளியேறும் விஷ ஜந்துக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.எனவே, பராமரிப்பு இல்லாத குளத்தை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை