உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் ஈசூர் கிராமவாசிகள் கோரிக்கை

அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் ஈசூர் கிராமவாசிகள் கோரிக்கை

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த ஈசூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வந்தன.இரண்டு அங்கன்வாடி மையங்களும் பழமையானதால், தற்காலிகமாக தனியாருக்கு சொந்தமான இடத்தில், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.கழிப்பறை மற்றும் கற்றல் விளையாட்டு பொருட்கள் பயன்படுத்த போதுமான இடவசதி இன்றி உள்ளது. இதனால், குழந்தைகளின் ஆரம்ப கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது.எனவே, புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்து தர, மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை