உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தென்னேரிப்பட்டு சாலையை சீரமைக்க வேண்டுகோள்

தென்னேரிப்பட்டு சாலையை சீரமைக்க வேண்டுகோள்

சித்தாமூர் : சூணாம்பேடு அருகே வேலுார் கிராமத்தில் இருந்து தென்னேரிப்பட்டு கிராமத்திற்கு செல்லும், 1.5 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது.பனையடிவாக்கம், சின்னகளக்காடி, வேலுார், தென்னேரிப்பட்டு ஆகிய கிராம மக்களுக்கு, இதுவே பிரதான சாலை.கடந்த 10 ஆண்டுகளாக, சாலை முழுதும் சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாய் காணப்படுவதால், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும், இப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாத காரணத்தால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், விவசாயப் பணிகளுக்கு செல்லும் விவசாயிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை