புதுப்பட்டு ஏரி மதகை சீரமைக்க வேண்டுகோள்
பவுஞ்சூர்:செய்யூர் அருகே புதுப்பட்டு கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இந்த ஏரி வாயிலாக, புதுப்பட்டு, மேலப்பட்டு, சிறுவங்குணம் ஆகிய கிராமங்களில் உள்ள, 400 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் நீர்ப்பாசனம் பெறுகின்றன.கடந்த 2022ம் ஆண்டு, ஏரியின் மதகு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஏரிக்கரை உடைந்தது. பின், மரக்கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளைக் கொண்டு, பொதுப்பணி துறையினர் வாயிலாக ஏரிக்கரை சீரமைக்கப்பட்டது.ஏரிக்கரை உடைந்ததில் மதகுப்பகுதி முழுதும் சேதமடைந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.இந்நிலையில், சேதமடைந்த மதகு சீரமைக்கப்படாததால் உள்ளதால், விவசாய நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி இல்லாமல், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளின் நலன் கருதி, பழுதடைந்த மதகு பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.