உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை சின்னமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

செங்கை சின்னமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

செங்கல்பட்டு,செங்கல்பட்டு சின்னமுத்து மாரியம்மன் கோவிலில் 89ம் ஆண்டு, ஆடித்திருவிழா நடந்தது. செங்கல்பட்டு, சின்ன மேலமையூர் பகுதியில், புகழ்பெற்ற சின்னமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், ஆடித் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு, 89 ம் ஆண்டு ஆடித்திருவிழா, கடந்த 1ம் தேதி சிறப்பு அபிஷேகத்துடன், அம்மனுக்கு காப்பு கட்டி, அம்மன் கிரகம் விதியுலா நடந்தது. நேற்று முன்தினம், கூழ்வார்த்தல், நடந்தது. மலர் அலங்காரத்தில் சின்னமுத்து மாரியம்மன் எழுந்தருளி, சின்னமேலமையூர், வேதாசலம் நகர் உள்ளிட்ட முக்கிய விதிகள் வழியாக சென்று, நேற்று கோவிலை வந்தடைந்து. விழாவில், அம்மன் சொற்பொழிவு மற்றும் திருவண்ணாமலை ரூபினி நாடக மன்றத்தினர் மூலம், ரேணுகாம்பாள் அம்மன் சரித்திர புராண நாடகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி மற்றும் முன்னாள் அறங்காவலர் சி.வி.என்.குமாரசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். வரும் 15ம் தேதி, ஆடித்திருவிழாவையொட்டி, விஷ்ணு, துர்க்கை அம்மனுக்கு கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை