உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காற்றில் ஊஞ்சலாடும் கண்காணிப்பு கேமரா

காற்றில் ஊஞ்சலாடும் கண்காணிப்பு கேமரா

மதுராந்தகம்: மதுராந்தகம், கருங்குழி, கக்கிலப்பேட்டை, மேலவளம்பேட்டை, படாளம், புக்கத்துறை மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவில் கண்டறியவும், சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறியும் வகையில், தனியார் நிறுவனங்கள் மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ., நிதியுதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.முக்கிய சாலை சந்திப்புகளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் உடைந்தும், செயல்பாடு இன்றியும் வெறும் காட்சிப்பொருளாகவே உள்ளது. கருங்குழி பகுதியில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில், நான்கு பக்கமும் கண்காணிக்கும் வகையில், நான்கு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில், இரண்டு உடைந்து, கீழே தொங்கி கொண்டு, வாகனங்கள் கடந்து செல்லும் போது காற்றில் ஊஞ்சலாடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பயன்பாடின்றி பழுதடைந்து, உடைந்துள்ள கேமராக்களை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி