உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆம்புலன்ஸ் ஓட்டுனர், பணியாளர் இன்று வேலை வாய்ப்பு முகாம்

ஆம்புலன்ஸ் ஓட்டுனர், பணியாளர் இன்று வேலை வாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும், '108' ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு முகாம், இன்று செங்கல்பட்டில் நடைபெறுகிறது.செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், இன்று காலை 10:00 மணி முதல், 2:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இதில், மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகளாக, பிளஸ் 2வுக்கு பின், பி.எஸ்.சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., டி.எம்.எல்.டி., இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.மேலும், 19 -- 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவியாளருக்கான மாத ஊதியம், 15,435 ரூபாய். எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் மனிதவள துறை தேர்வு நடைபெறும்ஓட்டுனருக்கான அடிப்படை தகுதிகளாக, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும். மேலும், 24 - 35 வயதுக்குள்ளும், உயரம் 162.5 செ.மீ., குறையாமல் இருக்க வேண்டும்.வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் பேட்ஜ் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் 15,235 ரூபாய். எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், சாலை விதிகளுக்கான தேர்வு மற்றும் கண் பார்வை திறன் தேர்வு நடத்தப்படும்.இதில், இலவச தாய் - சேய் நல வாகனம் மற்றும் இலவச அமரர் ஊர்தி வாகனம் ஓட்டுனர்களுக்கான பணியிடங்களும் நிரப்பப்படும். இதற்கு, மேலே குறிப்பிட்டுள்ள ஓட்டுனர் தகுதிகளுடன் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 044 - 2888 8060, 044 - 2888 8077, 044 - 2888 8075 ஆகிய தொலைபேசி எண்ணிலும், 73977 24803 என்ற மொபைல்எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை