உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கஞ்சா விற்ற ஆட்டோ ஓட்டுனர் கைது

கஞ்சா விற்ற ஆட்டோ ஓட்டுனர் கைது

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில், ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது.அதன்படி அங்கு சென்ற போலீசார், ஆட்டோவை மடக்கிப் பிடித்து, மதுவிலக்கு பிரிவுக்கு அழைத்து வந்தனர்.அங்கு, ஆட்டோ ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை செய்ததில், சென்னை, பாடி புதுநகரைச் சேர்ந்த அகஸ்டின், 26, என்பது தெரியவந்தது.அவரிடம் இருந்து, 1.300கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அகஸ்டினை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை