உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோகுலம் பொது பள்ளி மாணவர்களுக்கு விருது

கோகுலம் பொது பள்ளி மாணவர்களுக்கு விருது

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு அடுத்த, நென்மேலி கோகுலம் பொதுப் பள்ளியில், டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில், அப்துல் கலாம் சாதனையாளர் விருது வழங்கும் விழா, மாநில தலைவர் ஜெயராஜ் ராஜேந்திரன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. பள்ளி முதல்வர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.இதில், மொஹாலி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் வெங்கடேஸ்வரன், கூடுவாஞ்சேரி நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நீலன் உள்ளிட்டோர், கோகுலம் பள்ளியின் 12 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அப்துல் கலாம் சாதனையாளர் விருதுகளை வழங்கினர். இதில், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ