மாமல்லை கடற்கரையில் விழிப்புணர்வு
மாமல்லபுரம்:கடலிலும் கடற்கரையிலும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்டவை குவிவதால், நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதை தவிர்க்க, ஆண்டுதோறும் செப்., 21ம் தேதி, கடலோர துாய்மைப்படுத்தும் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நாளான நேற்று, மத்திய புவி அறிவியல் அமைச்சகம், தேசிய கடல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து, சென்னை, சத்யபாமா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் ரிமோட் சென்சிங் அண்டு ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்சென்டர் உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து, மாமல்லபுரத்தில் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.இக்கல்லுாரி மாணவ - மாணவியர் 50க்கும் மேற்பட்டோர், கடலையும், கடற்கரையையும் குப்பையின்றி துாய்மையுடன்பாதுகாப்பது, கடலில் பிளாஸ்டிக் குவியாமல் தடுப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றனர். மேலும், கடற்கரையில் உள்ள குப்பை கழிவுகளை துாய்மைப்படுத்தி, பயணியரிடம் விழிப்புணர்வுஏற்படுத்தினர்.