மேலும் செய்திகள்
தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: திணறும் போலீசார்
24-Sep-2025
சென்னை, அமெரிக்க துாதரகம், கமலாலயம், நடிகர் எஸ்.வி.சேகர் வீடு ஆகிய இடங்களுக்கு, இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மெரினா காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும், இ - மெயில்கள் வந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i573satv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவற்றில், 'அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துாதரகம், தி.நகரில் உள்ள கமலாலயம், நடிகர் எஸ்.வி.சேகர் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. மூன்று இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். வெடி பொருட்கள் ஏதும் இல்லை; மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இ - மெயில் முகவரியை பயன்படுத்தி, அவர் யார்? எங்கு இருந்து அனுப்பி உள்ளார் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் தொடர்ந்து டி.ஜி.பி., அலுவலக இ - மெயிலுக்கு, பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு மிரட்டல் வருவது, வெடிகுண்டு நிபுணர்களை விழிபிதுங்கச் செய்துள்ளது.
24-Sep-2025