குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
அச்சிறுபாக்கம்: குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானார். அச்சிறுபாக்கம் அருகே கொங்கரைமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் புருஷோத்தமன், 11. கொங்கரைமாம்பட்டில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று பள்ளி விடுமுறை என்பதால், கொங்கரைமாம்பட்டு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் பின்புறம் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது குளத்தில் தவறி விழுந்துள்ளார். புருஷோத்தமன் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால், பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். குளத்தில் மூழ்கிய சிறுவனை, இறந்த நிலையில் மீட்டனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தி போலீசார், உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.