உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டம், நேற்று துவங்கியது. செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 481, நடுநிலைப் பள்ளிகள் 188 என, மொத்தம் 669 பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 'முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம்' கடந்த 2023 ஆண்டு துவக்கப்பட்டது. இதில், 39,588 மாணவ - மாணவியர் பயன்பெறுகின்றனர். ஊரக பகுதிகளில், 55 அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 2,831 மாணவ - மாணவியருக்கு 2024ம் ஆண்டு ஜூலையில் இத்திட்டம் துவக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் 52 அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 5,966 மாணவ- மாணவியருக்கு, முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம், நேற்று துவக்கப்பட்டது. மதுராந்தகம் மதுராந்தகம் நகராட்சியில் உள்ள அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் நேற்று, 'முதல்வரின் காலை உணவுத் திட்டம்' துவக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில், அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளிகளான ஹிந்து கார்னேஷன் துவக்கப் பள்ளி மற்றும் ஹிந்து துவக்கப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் நேற்று, முதல்வரின் காலை உணவுத் திட்டம் துவக்கப்பட்டது. இதன்படி, இரண்டு பள்ளிகளையும் சேர்த்து, 150 மாணவ, மாணவியர் பயன் பெற்றனர். இந்நிகழ்வில், மதுராந்தகம் நகராட்சி கமிஷனர் அபர்ணா, நகராட்சி தலைவர் மலர்விழி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !