மேலும் செய்திகள்
குடிநீர் கை 'பம்ப்' சீரமைக்கப்படுமா?
14-Oct-2025
மதுராந்தகம் ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர், பழைய காலனி பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, பழைய குடிநீர் கிணறு அருகே, 14வது நிதிக்குழு திட்டத்தில், 2015 - 16ல், புதிதாக கை 'பம்ப்' அமைக்கப்பட்டது. தற்போது, கை பம்ப் பழுதடைந்து உள்ளதால், அப்பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் கை பம்ப்பில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். - ரா.மகேஷ், மதுராந்தகம்.
14-Oct-2025