மேலும் செய்திகள்
கேரள அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்
18-Nov-2024
பெருங்களத்துார்:பழைய பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் அஜித், 28. தனியார் நிறுவன ஊழியர். எட்டு மாதங்களாக, அடமானத்தில் இருந்த தனது 'டாடா ஜெஸ்ட்'காரை, மீட்ட அஜித், அந்த காரில் குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்துள்ளார்.பின், காரை வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில், வாகனத்தின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறி, கார் தீ பிடித்து எரிந்தது.சற்று நேரத்தில், தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிந்தது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில், காரில் இருந்த, 15,000 ரூபாய், விலையுயர்ந்த மொபைல் போனும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Nov-2024