உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; பி.டி.ஓ., அலுவலகவளாகத்தில் கழிவுநீர்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பி.டி.ஓ., அலுவலகவளாகத்தில் கழிவுநீர்

பி.டி.ஓ., அலுவலகவளாகத்தில் கழிவுநீர்

திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு, பல்வேறு தேவைகளுக்காக, தினசரி அப்பகுதிவாசிகள் வந்து செல்கின்றனர்.இந்த வளாகத்தை ஒட்டி தனியார் உணவகம் உள்ளது. உணவகத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர், பி.டி.ஓ., அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் வந்து பாய்கிறது. அங்கு வாகனங்கள் நிறுத்துவோர், ஓய்வு எடுப்போர் என, அனைவரும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.எனவே, அலுவலக வளாகத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.விஜய், திருப்போரூர்.

மலை போல் குவிந்துள்ள குப்பையால் பாதிப்பு

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மேலமையூர் ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகளில், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை, ஊராட்சி துாய்மை பணியாளர்கள், என்.ஜி.ஓ., நகர் பகுதியில் உள்ள ஏரி கரையோரம் தேக்கி வைக்கின்றனர்.அவ்வாறு தேக்கி வைத்துள்ள குப்பையை உடனுக்குடன் அகற்றாததால், அவை மலை போல் தேங்கியுள்ளன. அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீடுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.மேலமையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிவாசிகளுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அருகில் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், தேங்கி மலைபோல் குவிந்துள்ள குப்பையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ஜீவா, மேலமையூர்.

சாலையில் மண் திட்டுக்கள் கிளாம்பாக்கத்தில் அபாயம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்எதிரில், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும் மண் திட்டுகள் மற்றும் சிறிய ஜல்லி கற்கள் தேங்கியுள்ளன. இதனால், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகனங்கள் சறுக்கி, நிலைதடுமாறிவிபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சாலையில் குவிந்துள்ள மண் திட்டுகள் மற்றும் சிதறியுள்ள ஜல்லிக்கற்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ்.கிருஷ்ணன், கிளாம்பாக்கம்.

ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வேண்டுகோள்

மறைமலை நகர் காவல் நிலையம் அருகில், சிப்காட் செல்லும் சாலையில்ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. அதனால், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருவோர், தங்களின் வாகனங்களை இந்த பகுதியில் நிறுத்தும் போது, ஜல்லிக்கற்கள் குத்தி வாகனங்களின்டயர்கள் பஞ்சராகின்றன. எனவே, இந்தபகுதியில் சாலை அமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.- எஸ்.குமார், காட்டாங்கொளத்துார்.

சாலையில் உலவும் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் முதல் கேளம்பாக்கம் வரை உள்ள நெடுஞ்சாலையில், கொளப்பாக்கம், நெடுங்குன்றம், வேங்கடமங்கலம் ஆகிய பகுதிகளில், அதிக அளவில் மாடுகள்உலவுகின்றன.மேலும், அவை அடிக்கடி சாலையின் குறுக்கே கடப்பதாலும், அவ்வப்போதுசண்டையிட்டுக்கொண்டு ஓடுவதாலும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துவருகின்றனர்.சாலையில் நிரந்தரமாக தங்கியுள்ள மாடுகளைப் பிடிக்கவும், அவற்றின்உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக் கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.மதன், கொளப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை