| ADDED : மே 30, 2024 01:00 AM
சாலை மீடியனின் திடீர் தடுப்பு
செங்கல்பட்டு சாலையில் ஆபத்து
திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலையின் நடுவே மீடியன் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.செம்பாக்கம் அருகே சுண்ணாம்பு கால்வாய் என்ற இடத்தில், இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலை துவங்கும் இடத்தில் புதிதாக மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் மையத்தடுப்பு, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் பெரிய அளவிலும், எச்சரிப்பு ரிப்ளக்டர் பொருத்தப்படாமலும் உள்ளது.இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலையில் மீடியன் இருப்பதை அறியாமல், அதில் மோதி, அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விபத்தை தடுக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.- கே.பாண்டியன், செம்பாக்கம்.