மேலும் செய்திகள்
கேபிள்கள் புதைக்கும் பணி: மோசமான மில்லர்ஸ் சாலை
14-Nov-2024
மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு ராஜ வீதி, கடற்கரை சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்டவை, முக்கிய போக்குவரத்து சாலைகளாக உள்ளன.அவற்றில் உள்ளூர், சுற்றுலா வாகனங்கள், ஏராளமாக கடக்கின்றன. இச்சாலைகளின் கீழ், பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு, சாலையில் மேற்புற திறப்பு மூடிகள் உள்ளன.கான்கிரீட் மூடிகள் அடிக்கடி பெயர்ந்து, அபாய குழியுடன் உள்ளன. கடைகள், வீடுகள் ஆகியவற்றுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவற்காக, சாலையில் பள்ளம் தோண்டப்படுகிறது.இப்பணியை முடித்து, பள்ளங்களில் பெயரளவிற்கு கான்கிரீட் நிரப்பி மூடப்படுகிறது. சில நாட்களில் கான்கிரீட் பெயர்ந்து, அபாய பள்ளங்களாக மாறுகின்றன.இருசக்கர வாகன பயணியர், பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். பாதாள சாக்கடை மூடிகள், பள்ளங்களை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.ராஜேந்திரன்,மாமல்லபுரம்.
14-Nov-2024