உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சின்னம்மன் கோவில் தெப்பம் கட்டும் பணி தீவிரம்

சின்னம்மன் கோவில் தெப்பம் கட்டும் பணி தீவிரம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில், பழமைவாய்ந்த சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 16ம் ஆண்டு தெப்பல் விழா, வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.விழாவில், மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடை பெறுகிறது. இரவு 8:00 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, கோவில் அருகே உள்ள பெரியகுளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் அம்மன் எழுந்தருளி, குளத்தை வலம் வருவார்.மாலை 9:00 மணிஅளவில் வீதி உலா நடைபெறுகிறது. இதற்காக, குளத்தில் இரும்பு பேரல், சவுக்கு மரக்கட்டை கொண்டு, தெப்பம் கட்டும் பணிநடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை