மேலும் செய்திகள்
முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு
22-Nov-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க, வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின விழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும் என அறிவித்தார்.அதன்படி, முதல்வர் மருந்தகம் அமைக்க, பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், தமிழகம் முழுதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvar marundhagam.in.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இதற்கு, அரசு மானியம் 3 லட்சம் ரூபாய் இரண்டு தவணையாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.இந்நிலையில், வரும் 30ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என, செங்கல்பட்டு மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நந்தகுமார் தெரிவித்தார்.
22-Nov-2024