உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது மாமல்லை கடலில் மூழ்கி கல்லுாரி மாணவர் மாயம்

பொது மாமல்லை கடலில் மூழ்கி கல்லுாரி மாணவர் மாயம்

மாமல்லபுரம் கடலில் மூழ்கி, கல்லுாரி மாணவர் மாயமானார்.மாமல்லபுரம், சென்னை நங்கநல்லுாரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் மோகன்ராஜ், 17. சென்னை தனியார் கல்லுாரி, பி.காம்., முதலாமாண்டு மாணவர். இவரது சகோதரர், சகோதரி, நண்பர் ஆகியோருடன், நேற்று முன்தினம் மாமல்லபுரம் வந்தார். இப்பகுதி கடலில், மாலை 5:10 மணியளவில் மூவரும் குளித்த போது, அலையில் சிக்கியுள்ளனர்.மூன்று பேர் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்ட நிலையில், மோகன்ராஜ் நீரில் மூழ்கி மாயமானார். மாமல்லபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் இணைந்து, அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை