உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புகார் பெட்டி ; சூணாம்பேடு சாலை சந்திப்பில் உயர் மின்விளக்கு அவசியம்

புகார் பெட்டி ; சூணாம்பேடு சாலை சந்திப்பில் உயர் மின்விளக்கு அவசியம்

சூணாம்பேடு சாலை சந்திப்பில்உயர் மின்விளக்கு அவசியம்சூணாம்பேடு காலனி பகுதியில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து, திண்டிவனம் செல்லும் சாலையின் சந்திப்பு உள்ளது.தினசரி, எராளமான வாகனங்கள் சாலை சந்திப்பை கடந்து செல்கின்றன. இரவு நேரத்தில், சாலை சந்திப்பில் போதிய வெளிச்சம் இன்றி, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சு.கீர்த்திவாசன், சூணாம்பேடு.முறையாக மூடப்படாதபாதாள சாக்கடை பள்ளங்கள்மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு ராஜ வீதி, கடற்கரை சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்டவை, முக்கிய போக்குவரத்து சாலைகளாக உள்ளன.அவற்றில் உள்ளூர், சுற்றுலா வாகனங்கள், ஏராளமாக கடக்கின்றன. இச்சாலைகளின் கீழ், பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு, சாலையில் மேற்புற திறப்பு மூடிகள் உள்ளன.கான்கிரீட் மூடிகள் அடிக்கடி பெயர்ந்து, அபாய குழியுடன் உள்ளன. கடைகள், வீடுகள் ஆகியவற்றுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவற்காக, சாலையில் பள்ளம் தோண்டப்படுகிறது.இப்பணியை முடித்து, பள்ளங்களில் பெயரளவிற்கு கான்கிரீட் நிரப்பி மூடப்படுகிறது. சில நாட்களில் கான்கிரீட் பெயர்ந்து, அபாய பள்ளங்களாக மாறுகின்றன.இருசக்கர வாகன பயணியர், பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். பாதாள சாக்கடை மூடிகள், பள்ளங்களை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.ராஜேந்திரன், மாமல்லபுரம்.உயரமான வடிகால்வாய்மழைநீர் வடிவதில் சிக்கல்கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம், வீரபாகு நகர் பிரதான சாலையில், லேசாக மழை பெய்தாலும், மழை நீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில், குழந்தைகள் மையம் மற்றும் பள்ளிகள் உள்ளன.இந்த சாலையை பயன்படுத்தி, பள்ளி செல்லும் மாணவர்கள் தினமும் அதிகமானோர் சென்று வருகின்றனர். இந்த தெருவில், மழைநீர் வடிகால்வாய் இருந்தும், சாலை பள்ளமாகவும், மழைநீர் வடிகால்வாய் மேடாகவும் இருப்பதால் மழைநீர் சீராக செல்லாமல் சாலையில் தேங்கியுள்ளது.இதனால், சாலையை பயன்படுத்தி செல்லும் அனைவருக்கும் இடையூறாக உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் தலையிட்டு, மழைநீர் தேங்காமல் சீராக செல்ல, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.பரமேஸ்வரி, கூடுவாஞ்சேரி.செங்கழுநீரோடை வடிகால்வாயில்தேங்கியுள்ள கழிவுநீரால் அவதிதிருப்போரூர் ஒன்றியம், மானாமதி ஊராட்சிக்கு உட்பட்ட செங்கழுநீரோடை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தெருக்கள், முக்கிய சாலை ஓரத்தில் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசி வருகிறது.அங்கு, கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி, தொல்லை ஏற்படுத்துகிறது. அதனால், அப்பகுதி முழுதும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே, கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி, கொசு மருந்து தெளிக்க, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.நரேஷ், செங்கழுநீரோடை.சாலையில் பெரும் பள்ளம்வாகன ஓட்டிகளுக்கு ஆபத்துசிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், நியாய விலைக்கடை அருகில், சாலை நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில், பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சண்முகம், சிங்கபெருமாள் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !