புகார் பெட்டி கொட்டமேடு - எடர்குன்றம் சாலை மோசம்
கொட்டமேடு - எடர்குன்றம் சாலை மோசம்திருப்போரூர் ஒன்றியத்தில், கொட்டமேடு - எடர்குன்றம் சாலை உள்ளது. எடர்குன்றம் கிராமத்தினர் தங்களின் அனைத்து தேவைகளுக்காகவும் கொட்டமேடு சந்திப்பு வந்து, அங்கிருந்து திருப்போரூர், செங்கல்பட்டு, தாம்பரம், கூடுவாஞ்சேரி போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இந்த சாலை சேதமடைந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 1 கி.மீ., துாரத்திற்கு குண்டும் குழியுமாக உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் எடர்குன்றம் கிராமத்திற்கு நடந்தும், 'பைக்'கிலும் செல்வோர் அவதிப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த கிராமப்புறச் சாலையை சீரமைக்க வேண்டும்.-எம்.சரவணன்,எடர்குன்றம்.