உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு சாலை அமைக்கும் பணி தாமதம்

சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு சாலை அமைக்கும் பணி தாமதம்

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது, மொறப்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கருணாகரவிளாகம், சின்ன கருணாகர விளாகம், அருந்ததிப்பாளையம், மொறப்பாக்கம் காலனி பகுதிகள் உள்ளன.இதில், மொறப்பாக்கம் காலனியில் சுடுகாடு பகுதிக்குச் செல்ல, மண் சாலை உள்ளது.இந்த மண் சாலையை, மாவட்ட பொது நிதியின் வாயிலாக, 2025 -- 26ல், 450 மீட்டர் நீளத்திற்கு, சிமென்ட் கல் சாலையாக அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.ஆனால், சுடுகாட்டு பாதைக்குச் செல்லும் மண் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், கல் சாலை பணிகள் தடைபட்டுள்ளன.எனவே, வருவாய்த்துறை அதிகாரிகள் மண்பாதையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.இதுகுறித்து, வருவாய் துறை மற்றும் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை