உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விவசாய கிணற்றில் விழுந்த பசு பத்திரமாக மீட்பு

விவசாய கிணற்றில் விழுந்த பசு பத்திரமாக மீட்பு

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய நிலத்தில், கிணறு ஒன்று திறந்த நிலையில் உள்ளது.நேற்று இந்த கிணற்றில் அருகில், அப்பகுதியைச் சேர்ந்த வேதாச்சலம் என்பவருக்குச் சொந்தமான பசு மாடு ஒன்று மேய்ந்தது.திடீரென, அந்த கிணற்றில், பசு மாடு தவறி விழுந்து தத்தளித்தது.இதைப் பார்த்த அங்கிருந்தோர், மாட்டின் உரிமையாளர் வேதாச்சலத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அவர் அங்கு வந்ததும், கயிறு கட்டி மாட்டை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து, தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் தத்தளித்த பசு மாட்டை, கயிறு கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி