உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பள்ளியில் முகாமிடும் மாடுகள் முதலியார்குப்பத்தில் மாணவர்கள் பீதி

அரசு பள்ளியில் முகாமிடும் மாடுகள் முதலியார்குப்பத்தில் மாணவர்கள் பீதி

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது.ஆறு முதல் 10ம் வகுப்பு வரை 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.மேலும் இந்த பள்ளி வளாகத்தில், அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவை செயல்படுகின்றன.பள்ளி வளாகத்திற்கு, கிழக்குப் பகுதியில் சுற்றுச்சுவர் வசதி இல்லை. இதனால், பள்ளி வளாகத்தில் மாடுகள் மற்றும் நாய்கள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. கடந்த சில நாட்களாக பள்ளி நேரத்தில், மாடுகள் பள்ளியில் முகாமிடுவதால், மாணவ - மாணவியர் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.அதனால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த வேண்டும். மாடுகள், நாய்கள் பள்ளி வளாகத்தில் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ