செங்கையில் பயிர் காப்பீடு 30ம் தேதி வரை அவகாசம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பயிர் காப்பீடு செய்ய, வரும் 30ம் தேதி வரை, விவசாயிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்து.இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குனர் செல்வபாண்டியன் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா சாகுபடி மட்டுமின்றி, பல வகை பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. இதற்கு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், காப்பீடு செய்வதற்கு, இம்மாதம் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.இதனை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கடைசி தேதி வரை காத்திருக்காமல், முன்னதாகவே காப்பீடு செய்ய வேண்டும்.நெல் சம்பா பயிருக்கு, காப்பீட்டு தொகையில் விவசாயிகள், 15 சதவீதம் மட்டும் காப்பீடு கட்டணமாக, ஏக்கருக்கு 517.50 ரூபாய் செலுத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கூட, கடன் பெற்ற விவசாயிகள் பயிரியை காப்பீடு செய்துகொள்ளலாம்.கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள் மற்றும் www.pmfby.gov.inதேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தை அனுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.