உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் கடலுார் ஊராட்சி கட்டடம்

திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் கடலுார் ஊராட்சி கட்டடம்

கட லுார் கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில், கடலுார், காத்தங்கடை, வேப்பஞ்சேரி, மீனவர் குப்பங்கள் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. ஊராட்சி அலுவலகம், கடலுார் பிரதான சாலையில் இயங்குகிறது.இக்கட்டடம், நீண்ட காலத்திற்கு முன் கட்டப்பட்டது. தற்போது பலமிழந்தும், குறுகிய பரப்பிலும் செயல்பட்டது. மன்ற கூட்டம் நடத்தவும், சேவைகள் பெற வரும் பொதுமக்களுக்கும் இடவசதி இல்லை. புதிதாக ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஒருங்கிணைந்த கட்டடம் கட்ட முடிவெடுத்து, கடந்த ஆண்டு, கட்டடம் இடிக்கப்பட்டது.வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில், தற்போது, இட நெருக்கடியில் அலுவலகங்கள் இயங்குகின்றன. புதிய ஒருங்கிணைந்த கட்டடம், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று மாதங்களுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது வரை, அக்கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.அதில் அமைக்கவுள்ள பெயர் கல்வெட்டு தொடர்பான சர்ச்சை, அமைச்சர் திறப்பிற்காக காத்திருப்பு ஆகிய காரணங்களால், அது திறக்கப்படவில்லை என, கூறப்படுகிறது. அதை உடனே திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி