மேலப்பட்டில் ரூ.10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்ட முடிவு
பவுஞ்சூர்:க்ஷபவுஞ்சூர் அருகே சிறுவங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பட்டு கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு அரசு பள்ளி எதிரே செயல்படும் ரேஷன் கடையில் 195 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்து, மேல் தளத்தில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து மோசமான நிலையில் இருந்தது.இதனால் மழைக்காலத்தில் மழை நீர் கசிந்து அரிசி , சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் நனைந்தது.ஆகையால் புதிய கடை அமைக்க வேண்டு கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், 2005-26 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டதின் கீழ் 10 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது.விரைவில் கட்டுமானப்பணி துவங்கப்பட்டு கட்டடம் கட்டப்படும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.