உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பறிமுதல் மாட்டு வண்டிகளை அப்புறப்படுத்த கோரிக்கை

பறிமுதல் மாட்டு வண்டிகளை அப்புறப்படுத்த கோரிக்கை

மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் நிலையம், மருத்துவமனைசெல்லும் சாலையில் உள்ளது. இந்த சாலைவழியாக, அரசு, தனியார்பேருந்துகள், கனரக வாகனங் கள் சென்று வருகின்றன.மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கிளியாறு, கல்லாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட போது, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, ஐந்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், காவல் நிலையப் பகுதிமற்றும் மதுராந்தகம் கிளைச் சிறை பகுதி நடைபாதை ஓரம் நிறுத்தப்பட்டுள்ளன.கடந்த ஓராண்டிற்கு மேல் நிறுத்தப்பட்டுள்ளதால், அவை போக்குவரத்திற்கு இடையூறாகஉள்ளன. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ