| ADDED : மார் 18, 2024 03:27 AM
மதுராந்தகம் : மதுராந்தகம் கால்நடை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில், பராமரிப்பின்றி, பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ள டெம்போ டிராவலர் வேன், இரும்பு பொருட்கள் துருப்பிடித்து வீணாகி வருவதால், பொது ஏலம் விட கோரிக்கை எழுந்துள்ளது.பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் நடமாடும் கால்நடை ஆய்வக மருந்தகம் பயன்பாட்டிற்கான டெம்போ டிராவலர் வேன், சில ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டு வந்தது.தற்போது, பயன்பாடு இன்றி, சில மாதங்களாக, மதுராந்தகம் கால்நடைத்துறை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.வேன் பழுதடைந்துள்ளதால், இரும்பு பொருட்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. எனவே, உடனடியாக விற்பனை செய்து, அந்த பணத்தை வேறு வளர்ச்சி பணிக்கு பயன்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.