உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அபாய நிலையில் வி.ஏ.ஓ., ஆபீஸ் இடித்து புதிதாக கட்ட கோரிக்கை

அபாய நிலையில் வி.ஏ.ஓ., ஆபீஸ் இடித்து புதிதாக கட்ட கோரிக்கை

அச்சிறுபாக்கம்:சிறுபேர்பாண்டி ஊராட்சியில், இடிந்து விழும் நிலையிலுள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுபேர்பாண்டி ஊராட்சியில், அச்சிறுபாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட்ட பாபுராயன் பேட்டை, அல்லானுார், சிறுபேர்பாண்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு, கிராம நிர்வாக அலுவலக கட்டடம் உள்ளது.கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டடம் என்பதால், சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக, அலுவலகத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டது.இதனால், மழைக்காலங்களில் கிராம நிர்வாக அலுவலக பதிவேடுகள், ஆவணங்களை பாதுகாப்பதில் பெரும் சிரமமாக உள்ளது.எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி