| ADDED : மார் 17, 2024 01:47 AM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துார் ஊராட்சி, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 22.50 லட்சம் ரூபாயில், புதிதாக ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.வெங்கலேரி கிராமத்தில், பி.எம்.எ.ஜி.ஓய்., திட்டத்தின் கீழ், 13.37 லட்சம் ரூபாயில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்று, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், இனிப்பு வழங்கப்பட்டது.அதேபோல், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், 26.33 லட்சம் ரூபாயில் வெங்கலேரி பிரதான சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.மேலும், 44.09 லட்சம் ரூபாயில், ராஜிவ்காந்தி சிமென்ட் சாலை; 28.15 லட்சம் ரூபாயில், யாதவா தெரு சிமென்ட் சாலை அமைக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டது.விழாவில், தி.மு.க., திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் ஜோதிமணி, ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், வெங்கலேரி வார்டு கவுன்சிலர் சாவித்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.