உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

 கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டின் இறுதி செவ்வாய் தரிசனத்தில், ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில், அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். செவ்வாய்க்கிழமை கந்த பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், வழக்கமாக அன்றைய நாட்களில் கந்த பெருமானை தரிசிக்க, ஏராளமானோர் திருப்போரூருக்கு வருவர். அந்த வகையில், நேற்று 2024ம் ஆண்டின் கடைசி செவ்வாய் என்பதால், காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், எடைக்கு எடை துலாபாரம் எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். வட்ட மண்டபத்தை 11, 108 முறைப்படி சுற்றியும், வட்ட மண்டபம் அருகே விளக்கேற்றியும், கூட்டு வழிபாடு செய்தனர். இதனால், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மாட வீதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ