உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூரில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. தென்திருப்பதி என அழைக்கப்படும், இக்கோவில் மிகவும் பழமையானது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அத்துடன், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் காட்சியளித்தார். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல, திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் அய்யப்பன் கோவிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, அதிகாலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர். காலை, 10:30 மணிக்கு, விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.மாலை, 5:30 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவமும், 6:00 மணிக்கு உறியடி உற்சவமும் நடந்தது. நெல்லிக்குப்பம் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அதிகாலை 5:30 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ