உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோமாரி நோய் தடுப்பூசி வரும் ஜன., 3ல் துவக்கம்

கோமாரி நோய் தடுப்பூசி வரும் ஜன., 3ல் துவக்கம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணி, வரும் ஜன., 3ம் தேதி துவங்குகிறது.கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கால், வாய் ஆகிய பகுதிகளில், கோமாரி நோய் தாக்கப்படுகிறது. இதனால், கால்நடைகள் இறப்பதால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம்.செங்கல்பட்டு மாவட்டத்தில், 2 லட்சத்து 54 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்பூசி பணி, வரும் ஜன., 3ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசு, எருது, எருமை மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றுக்கு, கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை