உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

செங்கல்பட்டு,செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா பணியாற்றி வந்தார். இவர் நேற்றுமுன்தினம், ஓய்வு பெற்றார். செங்கல்பட்டு வழக்கறிஞர் அசோசியேஷன் சார்பில், ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனாவுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். செயலர் பாஸ்கரன் வரவேற்றார்.இதில், மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி, தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் வரதன் சங்கர் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதானவுக்கு, நினைவு பரிசுகளை வழக்கறிஞர்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ