உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அமித்ஷா வை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அமித்ஷா வை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மறைமலைநகர்:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'இப்போதெல்லாம் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என பேசுவது 'பேஷன்' ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும்' என, ராஜ்ய சபாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதை கண்டித்து தி.மு.க., சார்பில் நேற்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அந்த வகையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை முன், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பா.ஜ., மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதே போல சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை