மேலும் செய்திகள்
ஆதார் மைய கட்டடம் கட்ட ஆதரவும், எதிர்ப்பும்
10-Dec-2025
மறைமலை நகர்: காட்டாங்கொளத்துாரில் நுாலகம் அமைக்க பூமி பூஜை நடந்தது. காட்டாங்கொளத்துாரில், 30 ஆண்டுகளாக கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம் மிகவும் சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை ஒதுக்கிய 62 லட்சம் ரூபாயில் புதிய கட்டடம் கட்ட, நேற்று முன்தினம் அடிக்கல் நடுதல் மற்றும் பூமி பூஜை நடந்தது. மறைமலை நகர் தி.மு.க., நகராட்சி தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இதில் செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், நகராட்சி அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
10-Dec-2025