மதுராந்தகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை இணைந்து, செங்கல்பட்டு மாவட்ட தேசிய பசுமை படை சார்பில், விழிப்புணர்வு பிரசாரம், நேற்று நடந்தது.மக்கள் கூடும் இடங்களில் கிராமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், காலநிலை மாற்றம், மின்சாரத்தை சிக்கனப்படுத்துதல், பல்லுயிர் பெருக்கம், நீர் மற்றும் காற்று மாசுபாடு தவிர்த்தல் குறித்து, பாடல்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.