உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளி, கல்லுாரி மாணவருக்கு 9ம் தேதி கட்டுரை போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவருக்கு 9ம் தேதி கட்டுரை போட்டி

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 9ம் தேதி கட்டுரை போட்டி நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில், ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் முறையே, 10,000 ரூபாய், 7,000 ரூபாய் 5,000 ரூபாய் வழங்கி, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.இப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில், அரசு செலவில் செல்லும் வாய்ப்பை பெறுவர். நடப்பு 2023- - 24ம் ஆண்டுக்கான பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 9ம் தேதியும், கல்லுாரி மாணவர்களுக்கு, 10ம் தேதியும், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரியில், காலை 9:00 மணிக்கு நடைபெறும்.இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், தலைமை ஆசிரியரிடமும், கல்லுாரி மாணவர்கள் முதல்வரிடமும், பரிந்துரை பெற்று பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ