உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விளைநிலங்களில் மழைநீர் கவலையில் விவசாயிகள்

விளைநிலங்களில் மழைநீர் கவலையில் விவசாயிகள்

செய்யூர்,:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட, லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 30,000 ஏக்கரில் விவசாயப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.ஏரி, ஆறு, குளம், கிணறு, ஆழ்துளைகிணறு போன்ற நீர் ஆதாரங்கள் மூலமாக நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்ப்பூசணி ஆகியவை பருவத்திற்கு ஏற்றாற்போல பயிரிடப்படுகிறது.இப்பகுதியில் அதிகபடியாக சம்பா பருவத்தில் நெற்பயிர் விவசாயம் செய்யப்படுகிறது. அடுத்த படியாக மணிலா விவசாயம் செய்யப்படும்.ஆண்டுதோறும் டிச., ஜன., மாதத்தில், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், 7,000 ஏக்கர் பரப்பளவில் மணிலா பயிரிடப்படுவது வழக்கம்.இந்தாண்டும் கடந்த சில தினங்களாக மணிலா பயிரிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று பெய்த மழை காரணமாக மணிலா பயிரிடப்பட்ட வயல்வெளியில் மழைநீர் தேங்கியது.குறிப்பாக, அரசூர், சூணாம்பேடு, வில்லிப்பாக்கம், வெடால், போந்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயி கூறியதாவது:மணிலா பயிர் விதைத்து ஐந்து நாட்களுக்கு மேலான நிலங்களில் மழைநீர் தேங்கினாலுாம், நீரை வெளியேற்றினால் சேதத்தில் இருந்து ஓரளவிற்கு தப்பித்துக் கொள்ளலாம்.ஆனால், விதைத்து இரண்டு, மூன்று நாட்களுக்குள் நிலத்தில் மழை நீர் தேங்கினால், மணிலா விதை முழுதும் அழுகி வீணாகி விடும்.எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை