பழைய ஓய்வூதியம் திட்டம் கோரி உண்ணாவிரதம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இயக்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இயக்கம் சார்பில், தி.மு.க., சட்டசபை தொகுதி தேர்தல் அறிக்கையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரிலோகசந்திரன் தலைமையில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்க மாநில துணைத் தலைவர் எட்டியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.